‘5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்’… துரைமுருகன் பின்னடைவு!

 

‘5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்’… துரைமுருகன் பின்னடைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் படி திமுக 134 தொகுதிகளிலும் அதிமுக 102 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக முக்கியப் புள்ளிகள் பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

‘5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்’… துரைமுருகன் பின்னடைவு!

இதே வேளையில், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் முன்னிலை வகிக்கின்றனர். ராயபுரம் தொகுதியில் ஐடீரிம் மூர்த்தி, ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன், விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகரன் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக தான் வெல்லும் என கணிக்கப்பட்டிருந்த தொகுதிகளில் எல்லாம் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருப்பது திமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.