“அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா?” துரைமுருகன்

 

“அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா?” துரைமுருகன்

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா?” துரைமுருகன்

தமிழக இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் உரைக்கு முன்பாக பேச அனுமதி கேட்ட எதிர்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதனால் திர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் 11வது முறையாக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதைஎடுத்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிடாமல் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

“அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா?” துரைமுருகன்

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்த திமுகவினர் தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ₹1 லட்சம் கோடியாக இருந்தது . தற்போது தமிழக அரசின் கடன் சுமை 5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியது தான் அதிமுக அரசின் சாதனை. தமிழகத்தின் வளர்ச்சியை அதிமுக அரசு 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது; தமிழகத்தை ஆட்சி செய்ய அதிமுகவுக்கு அருகதை இல்லை. அதிமுக ஆட்சிக்கு அழிக்கமுடியாத கரும்புள்ளியை இபிஎஸ் -ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில் நிதி நிலைமை திமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்செய்யப்படும்” என்றார்