17ஆவது சுற்றுக்கு பிறகு லீடிங் எடுத்த துரைமுருகன் – உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

 

17ஆவது சுற்றுக்கு பிறகு லீடிங் எடுத்த துரைமுருகன் – உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் படி திமுக 151 தொகுதிகளிலும் அதிமுக 82 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக முக்கியப் புள்ளிகள் பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

17ஆவது சுற்றுக்கு பிறகு லீடிங் எடுத்த துரைமுருகன் – உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

இதை விட பெரிய அதிர்ச்சியாக அமைந்தது துரைமுருகனின் பின்னடைவே. தபால் வாக்குகள் எண்ணப்பட்டத்திலிருந்தே அவர் தொடர்ந்து 17 சுற்றுகளிலும் பின்னடைவையே சந்தித்திருந்தார். இன்னும் 8 சுற்றுகள் இருக்கும் நிலையில், துரைமுருகன் முன்னிலை பெற்றிருக்கிறார். 57 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ராமுவை விட துரைமுருகன் முன்னிலையில் உள்ளார்.