திமுக – தேமுதிக: தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை!

 

திமுக – தேமுதிக: தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை!

பாஜக ஒருபக்கம் திமுகவினரை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்க, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்கும் வேலைகளை தொடங்கிவிட்டது திமுக.

வெறும் வாக்கு சதவிகிதத்தை வாங்கிக்கொண்டிருப்பதனாலும், வாக்குகளை பிரிப்பதனாலும் பிரயோசனம் இல்லை என்றுதான் தனித்து போட்டி என்ற நிலையில் இருந்து மாறி 2011ல் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது தேமுதிக. அடுத்த தேர்தலில் தேமுதிக தலைமையிலான ஆட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது.

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். அது ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் இதுவரை இல்லாத திருப்புமுனை அரசியலாக இருக்கும். நிச்சயமாக தமிழகத்தில் மிகப்பெரிய மாறுதலான தேர்தலாக இருக்கும் என்று பிரேமலதா தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அண்மையில் திமுகவின் முக்கிய பிரமுகருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பிரேமலதா.

அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், திமுக பிரமுகருடனான இந்த சந்திப்பு, திமுகவுடன் கூட்டணி அமைப்பதையே தேமுதிக விரும்புவதாக தெரிகிறது.

திமுக பிரமுகருடனான அந்த பேச்சில், ‘ஆட்சியில் பங்கு’ என்பதை பிரேமலதா வலியுறுத்தியதாக தகவல். கடந்த முறை இந்த கோரிக்கைக்கு திமுக திமுக செவி சாய்க்காததால்தான் அமைவதாக இருந்த கூட்டணி கடைசி நேரத்தில் திசைமாறியது என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த முறை தேமுதிகவின் வார்த்தையை செவி கொடுத்து கேட்கிறதாம் திமுக.