சிதறும் திமுக கூட்டணி; அவசர கதியில் ம.செ.க்களை சந்திக்கும் ஸ்டாலின்

 

சிதறும் திமுக கூட்டணி; அவசர கதியில் ம.செ.க்களை சந்திக்கும் ஸ்டாலின்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

சிதறும் திமுக கூட்டணி; அவசர கதியில் ம.செ.க்களை சந்திக்கும் ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தொகுதி பங்கீடு, வேட்பாளர்களின் நேர்காணலில் படு பிஸியாக அரசியல் கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணி கட்சியில் விசிகவுக்கு 6, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனித நேய மக்கள் கட்சி 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.இதனால் திமுக கூட்டணி சிதறி, மூன்றாவது அணியில் சேருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

சிதறும் திமுக கூட்டணி; அவசர கதியில் ம.செ.க்களை சந்திக்கும் ஸ்டாலின்

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி மூலம் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் , பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.வரும் 7 ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.