ஜன.21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

 

ஜன.21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜன.21ம் தேதி நடைபெறவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

ஜன.21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 21.1 2021 வியாழக் கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜன.21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் சூழலில், ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக களமிறங்கியிருக்கிறது. ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். திமுகவின் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது. தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் களமே சூடுபிடித்திருக்கும் சூழலில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவது உற்று நோக்கப்படுகிறது.