16 தொகுதிகள் கொடுங்க…கெஞ்சும் மார்க்சிஸ்ட்டிடம் கறார் காட்டும் திமுக!

16 தொகுதிகள் கொடுங்க…கெஞ்சும் மார்க்சிஸ்ட்டிடம் கறார் காட்டும் திமுக!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பணிகளில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் பயணம் என அதிரடியாக களமிறங்கியிருக்கும் திமுகவும் அதிமுகவும் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலின் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார்.

16 தொகுதிகள் கொடுங்க…கெஞ்சும் மார்க்சிஸ்ட்டிடம் கறார் காட்டும் திமுக!

அதற்கான பிளான்களை கொடுக்க, ஐபேக் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார். கோடி கோடியாக பணம் கொடுத்து ஐபேக்கை இறக்கி இருப்பதால் மொத்த பணிகளையும் அதனிடமே கொடுத்து விட்டார். தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்தையும் ஐபேக் தான் கவனிக்கிறதாம். இதனால் தான், கேட்ட தொகுதிகள் வழங்கப்படவில்லையென கூட்டணி கட்சிகள் வேதனை தெரிவிக்கின்றன.

16 தொகுதிகள் கொடுங்க…கெஞ்சும் மார்க்சிஸ்ட்டிடம் கறார் காட்டும் திமுக!

விசிக, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை திமுக கொடுத்த தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் தொடருகின்றன. மதிமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

16 தொகுதிகள் கொடுங்க…கெஞ்சும் மார்க்சிஸ்ட்டிடம் கறார் காட்டும் திமுக!

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. அதில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக விரும்பும் நிலையில், 16 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.