வேலுமணியின் அட்டகாசம்; தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துங்கள்!!

 

வேலுமணியின் அட்டகாசம்; தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துங்கள்!!

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடப்பதால் அங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி களமிறங்குகிறார். நேற்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடையில் வைத்து அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். இதை அறிந்த திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கும், வருமானவரித்துறை இருக்கும் புகார் அளித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மளிகை கடை உரிமையாளர் தங்கராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர், இது குறித்து அறிந்த திமுகவினர் காவல் நிலையத்திற்கு சென்றபோது போலீஸ் அவர்களை அடித்து விரட்டி உள்ளது.

வேலுமணியின் அட்டகாசம்; தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துங்கள்!!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், அங்கு விசாரணை மேற்கொண்டார்.அப்போது திமுகவினர், குனியமுத்தூர் காவல் நிலையம் எஸ்.பி. வேலுமணி வீடு போல செயல்படுகிறது . இங்கு வைத்து பணம் பட்டுவாடா நடைபெறுகிறது. சுமார் பல லட்சம் கணக்கில் மளிகை கடையில் இருந்து பணத்தை கைப்பற்றிய நிலையில் வெறும் 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறுவதே ஏற்கும்படியாக இல்லை. இதனால் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

வேலுமணியின் அட்டகாசம்; தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துங்கள்!!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருமானவரித் துறையினர் சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் விஐபி தொகுதியாக பார்க்கப்படும் தொண்டாமுத்தூரில் பணம் பட்டுவாடா காரணமாக தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே திமுகவினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.