காலியான 3 அதிமுக எம்பி பதவிகள்… கைப்பற்ற துடிக்கும் திமுக – தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம்!

 

காலியான 3 அதிமுக எம்பி பதவிகள்… கைப்பற்ற துடிக்கும் திமுக – தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம்!

சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ராஜ்யசபா எம்பிக்களான கேபி முனுசாமியும் வைத்திலிங்கமும் போட்டியிட்டனர். இருவரும் தத்தமது தொகுதியில் வெற்றிவாகை சூடி எம்எல்ஏவாகினர். இதற்குப் பிறகு அவர்கள் எந்தப் பதவியை ராஜினாமா செய்ய போகீறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முடிவில் இருவரும் சேர்ந்த எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் அந்த இரு இடங்களும் காலியாக உள்ளன. அதேபோல மற்றொரு அதிமுக எம்பியான முகமது ஜான் மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் வகித்த இடமும் காலியாக உள்ளது. மொத்தமாக மூன்று எம்பி பதவிகள் காலியாக இருக்கின்றன.

காலியான 3 அதிமுக எம்பி பதவிகள்… கைப்பற்ற துடிக்கும் திமுக – தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம்!

மொத்தம் ஆறு ஆண்டுகள் பதவிக் காலம். அதில் கேபி முனுசாமி பதவிக்காலத்தில் 5 ஆண்டுகள், வைத்திலிங்கத்தின் பதவிக்காலத்தில் 1 ஆண்டுகள், முகமது ஜானுக்கு 4 ஆண்டுகள் பூர்த்தியாகாமல் உள்ளன. தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றிருப்பதால் மூன்று எம்பி பதவிகாளும் அக்கட்சி வசமே செல்லும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸுக்கு ஒரு இடம் கொடுப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் வந்த பிறகே இறுதி முடிவு எட்டப்படும். ஆனால் அதற்கு முன்பே கட்சி தலைவர்களுக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டுள்ளன.

காலியான 3 அதிமுக எம்பி பதவிகள்… கைப்பற்ற துடிக்கும் திமுக – தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம்!

இச்சூழலில் மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலுவும், ராஜ்யசபா எம்பி வில்சனும் தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திராவை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 147இன் படி மாநிலங்களவைக்கான தற்காலிக காலியிடங்கள் தனித்தனியான தேர்தல்கள் மூலம் நிரப்பட வேண்டும், பிரிவு 70ஒன் படி பதவிகளைத் துறந்ததால் ஏற்படும் காலியிடங்களைத் தற்காலிக காலியிடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் உடனடியாக தற்காலிக காலியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

காலியான 3 அதிமுக எம்பி பதவிகள்… கைப்பற்ற துடிக்கும் திமுக – தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம்!

காலதாமதம் செய்வதால் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைத் தேர்தல் ஆணையம் புறக்கணிக்கும் வகையில் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள நோக்கங்களுக்கும் எதிரானதாகும். மாநிலங்களவையில் ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான மூன்று தற்காலிக காலியிடங்களை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி உடனடியாக தனித்தனி இடைத்தேர்தல் மூலமாக நிரப்ப ஆவன செய்து தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.