காங்கிரஸ் கட்சிக்கு 24 அல்லது 25 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புதல்!

 

காங்கிரஸ் கட்சிக்கு 24 அல்லது 25 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புதல்!

திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது. ஆனால் திமுக தரப்பிலோ, காங்கிரசின் எதிர்பார்ப்பில் பாதிக்கும் கிழே இறங்கிச்செல்வதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், திமுகவிலிருந்து காங்கிரஸ் வெளியேற முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியானது. தெரிவிக்கின்றன. முதலில் 28 தொகுதிகள் தருகிறோம் எனக் கூறிய திமுக இப்போது 25 தொகுதிகளை தர முன்வந்திருக்கிறது. ஆனால், 27 ஆவது வேண்டும் என்று காங்கிரஸ் கறாராக கூறிவந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 24 அல்லது 25 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புதல்!

இந்நிலையில் திமுக- காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு சற்று நேரத்தில் கையெழுத்தாகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 24 அல்லது 25 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் கூடுதலாக ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்க வேண்டுமென காங்கிரஸ் திமுகவிடம் கேட்டுவருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.