‘வெளியாட்கள் நடமாட்டம்’… தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்!

 

‘வெளியாட்கள் நடமாட்டம்’… தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. அன்று இரவே மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த பகுதிகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

‘வெளியாட்கள் நடமாட்டம்’… தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்!

இருப்பினும், ஆளுங்கட்சியை நம்பாத திமுகவினர் எல்லா மையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் நடமாட்டம் இருப்பதாக திமுக பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளனர். திமுக பிரமுகர்களான ஆ.ராசா, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

‘வெளியாட்கள் நடமாட்டம்’… தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்!

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கோவை, திருவள்ளூர், சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் லாரிகளை கொண்டு சென்றுள்ளனர். தற்காலிக கழிவறைகளை கொண்டு செல்வதற்காகவே அனுமதித்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் லேப்டாப் கொண்டு செல்வதாக 31 பேர் சென்றுள்ளனர். வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்கள் நடமாட்டத்தால் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் ஏற்படுகிறது என்று கூறினர்.