நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

 

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் – திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம் என்று கருணாநிதியின் நினைவுநாளையொட்டி தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று (வியாழன்) அவர் வெளியிட்டுள்ள தொண்டர்களுக்கு கடிதம் அறிக்கையில், “எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது. காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை – தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த தலைவர் கலைஞர் அவர்கள்.

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
அரசியல் – ஆட்சி நிர்வாகம் – சொற்பொழிவு – இலக்கியப் படைப்பு – கவியரங்கம் – திரை வசனம் – தொலைக்காட்சித் தொடர் – சமூக வலைதளப் பதிவு என எல்லா நிலையிலும் தனது கொள்கையினை நிலைநிறுத்திய சளைக்காத போராளி. காலத்திற்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலன் விளைவித்த சமுதாயப் பாதுகாவலர்.

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து – அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து – நம் உதிரத்திலிருந்து – உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் தலைவர் கலைஞர் கலந்திருக்கிறார். கழக உடன்பிறப்புகள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற உடன்பிறப்புகளும் அவர்களில் உண்டு. தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்று, 19 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் முதல்வராக மக்களின் பேராதரவுடன் பணியாற்றி, தலைவர் கலைஞர் தீட்டிய திட்டங்களாலும் நிறைவேற்றிய சட்டங்களாலும் பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் – பட்டியல் இன சமுதாயத்தவர் – பழங்குடியினர் – சிறுபான்மை சமுதாயத்தினர் – பெண்கள் – மாற்றுத்திறனாளிகள் – திருநங்கையர் என சமூகத்தில் எவரெல்லாம் புறக்கணிக்கப்பட்டவர்களோ, அவர்களெல்லாம் ஏற்றம் பெறச் செய்த மாண்பாளர் அவர்.
‘இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி’ என மக்களின் மனதில் நிலைத்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப்பொறுப்பில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திய அதேவேளையில், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார். பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும்

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

உருவாக்குவதில் இந்திய அரசியலின் சூத்திரதாரியாக விளங்கிய தலைவர் கலைஞர் மாநில நலன் காப்பதில் பிற மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபட்டார்.
‘மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவற்றி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் குறித்த அரசியல் பாடத்தை டெல்லி ஆட்சியாளர்களுக்கு விளக்கியவர் கலைஞர். இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மதநல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் – உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது.

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் – நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், உடன்பிறப்புகளான நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும்போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கலைஞர் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம். தலைவர் கலைஞர் அவர்கள் படைத்த சாதனைகளையும் அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.

நெருக்கடிக்கு அஞ்சாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றியை உறுதிபடுத்துவோம்! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் – திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்” என்று கூறியுள்ளார்.