“இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் ஏமாற்றும் திமுக” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

 

“இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் ஏமாற்றும் திமுக” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் திமுக மக்களை ஏமாற்றுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

“இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் ஏமாற்றும் திமுக” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீனிவாசபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க பாதை திட்டப் பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் திமுக மக்களை ஏமாற்றுகிறது. மக்களை நேரடியாகச் சென்று உறுப்பினராகக் கட்சியில் சேர்த்தால் தான் அது உண்மை. அதற்கு மாறாக இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் அவர்களின் ஆட்களை வைத்து ஏமாற்றி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டினார்.

“இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் ஏமாற்றும் திமுக” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இதனிடையே திமுக எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் கீழ் இணையவழியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில குளறுபடிகள் கூட இருப்பதாகவும், அதிபர் டிரம்ப்க்கு திமுக உறுப்பினர் அட்டை உள்ளது போன்ற புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.