“இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? அடிச்சு காட்டு” போடியை அலறவிடும் தங்க தமிழ்ச்செல்வன்

“இப்படியே பேசிக்கிட்டு  இருந்தா எப்படி? அடிச்சு காட்டு” போடியை அலறவிடும்  தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்ற தேர்தலில் திமுக – அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இரு பிரதான கட்சிகளும் மாறி மாறி சாடி வருகின்றனர். அதுதான் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் களைகட்டியுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் துணி தேய்த்தும், இட்லி, பூரி போன்றவற்றை சமைத்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

“இப்படியே பேசிக்கிட்டு  இருந்தா எப்படி? அடிச்சு காட்டு” போடியை அலறவிடும்  தங்க தமிழ்ச்செல்வன்

இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அங்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை போடிநாயக்கனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் கீழத்தெரு, கட்டபொம்மன் சிலை மற்றும் சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நல்வாழ்வு அளிக்கும் திட்டங்கள் உள்ளன. அதனால் மறக்காமல் திமுகவுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள் என்று கூறி ஓட்டு கேட்டு வந்தார்.

“இப்படியே பேசிக்கிட்டு  இருந்தா எப்படி? அடிச்சு காட்டு” போடியை அலறவிடும்  தங்க தமிழ்ச்செல்வன்

சர்ச் தெருவில் ட்ரம் செட், பேண்டு வாத்திய கலைஞர்கள் அதிகம் வசிக்கும் சர்ச் தெருவுக்கும் சென்ற தங்க தமிழ்செல்வன், அந்த கலைஞர்களுடன் இணைந்து பேண்ட் வசித்தப்படி வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.