எஸ்.பி. வேலுமணி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!!

 

எஸ்.பி. வேலுமணி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!!

வருமானம் தொடர்பான ஆவணங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறையாக சமர்பிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

எஸ்.பி. வேலுமணி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!!

தமிழக தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதியும் போட்யிடுகிறார்கள். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடக்கிறது.

எஸ்.பி. வேலுமணி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!!

இந்தநிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானம் தொடர்பான ஆவணங்களை சரிவர சமர்பிக்கவில்லை என்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், ” அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேட்புமனுவில் பல குறைகள் உள்ளன. அவர் வருமானம் குறித்து சரிவர குறிப்பிடவில்லை. அவரது சொத்து கடந்த தேர்தலை விட உயர்ந்துள்ளது. மனைவி பெயரில் உள்ள ரூ.70 லட்சத்திற்கு விளக்கம் இல்லை. இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. வேலுமணியின் மகன் வருமானம் இல்லாமல் எப்படி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கினார்” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.