“தெர்மகோல் ராஜூவை விரட்டியடிப்போம்” – அமைச்சரை அட்டாக் செய்த சின்னம்மா!

“தெர்மகோல் ராஜூவை விரட்டியடிப்போம்” – அமைச்சரை அட்டாக் செய்த சின்னம்மா!

தமிழகத்தில் தற்போது அமைச்சராக இருக்கும் 27 பேர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் களம் காண்கிறார். அவரை எதிர்த்து சின்னம்மா என்ற பெண் வேட்பாளரை களமிறக்கியிருக்கிறார் ஸ்டாலின். சின்னம்மா புதுமுகம்.

“தெர்மகோல் ராஜூவை விரட்டியடிப்போம்” – அமைச்சரை அட்டாக் செய்த சின்னம்மா!

புதுமுகம் தானே என்ன செய்துவிடுவார் என்று நினைத்த அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு சின்னம்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் சின்னம்மா. ஆதரவாளர்களுடன் வந்த சின்னம்மா சும்மா வரவில்லை. தெர்மகோலுடன் வருகை தந்து மாஸ் காட்டிவிட்டார்.

“தெர்மகோல் ராஜூவை விரட்டியடிப்போம்” – அமைச்சரை அட்டாக் செய்த சின்னம்மா!

அதுமட்டுமில்லாமல் அந்த தெர்மகோலில், “தெர்மாகோல் ரூ.10 லட்சம் ப்பே… தெர்மாகோல் ராஜூவை துரத்தியடிப்போம்”, “கோமாளி – துக்ளக் ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம்”, “ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் வீழ்த்துவோம்” உள்ளிட்ட அமைச்சரை எதிர்க்கும் வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட இன்றே பிரச்சாரத்தைத் துவக்கி விட்டார் சின்னம்மா. சரியான ஆளைத் தான் ஸ்டாலின் இறக்கி விட்டிருக்கிறார் என உடன்பிறப்புகள் ஆர்ப்பரிக்கின்றனர்.

“தெர்மகோல் ராஜூவை விரட்டியடிப்போம்” – அமைச்சரை அட்டாக் செய்த சின்னம்மா!

வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சியாக 2019ஆம் ஆண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மகோலின் உதவியை நாடினார். இதற்காக தெர்மகோல்களை செல்லோடேப்பால் ஒட்டி அணையில் அவரே மிதக்க விட்டார். 10 சதுர கி.மீ அளவுள்ள வைகை அணைக்கு 300 தெர்மாகோல்களை அமைச்சர் விட்ட மாத்திரத்தில் வீசும் காற்றுக்கு தாக்குப் பிடிக்காமல் தெர்மகோல்கள் கரை ஒதுங்கின. அன்றிலிருந்து தெர்மகோல் செல்லூர் ராஜூ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.