‘அதிமுக வேட்பாளர்’ வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு!

 

‘அதிமுக வேட்பாளர்’ வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு!

கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மே மாதம் 7ஆம் தேதி திமுக அரசு பதவியேற்றது. புதிய அரசு ஆட்சி அமைத்து 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இன்னும் வேட்பாளர்களுக்கு இடையேயான மோதல் நீடித்து வருகிறது.

‘அதிமுக வேட்பாளர்’ வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு!

இந்த நிலையில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக்குமார் திமுக சார்பில் செங்குட்டுவன் போட்டியிட்ட நிலையில் 794 வாக்கு வித்தியாசத்தில் அசோக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

செங்குட்டுவன் அளித்துள்ள மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் வேட்பு மனுவில் தனது நிலம் பற்றிய தகவலை அசோக்குமார் மறைத்துள்ளதாகவும் அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓட்டுக்காக அவர் பணம் கொடுத்ததாகவும் வேட்பாளர்களுக்கு என நியமிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் செலவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். திமுக வேட்பாளர் செங்குட்டுவனின் மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.