சூரக்கோட்டை பகுதியில் திமுகவினர் அட்டூழியம் : ஓபிஎஸ் கண்டனம்!!

 

சூரக்கோட்டை பகுதியில் திமுகவினர் அட்டூழியம் : ஓபிஎஸ் கண்டனம்!!

சூரக்கோட்டை பகுதியில் திமுகவினர் அடாவடி செயலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார்.

சூரக்கோட்டை பகுதியில் திமுகவினர் அட்டூழியம் : ஓபிஎஸ் கண்டனம்!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தஞ்சாவூர் சூரக்கோட்டை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருவதாகவும், இந்த கடைக்கு மன்னார்குடி நகர திமுக இளைஞரணி செயலாளர் சுதாகர், விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், மாணவர் அணி நகர துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 8 பேர் சென்ற தகராறில் ஈடுபட்டதாகவும், கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி பலாத்காரம் செய்ததாகவும், இதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை திமுகவினர் கடுமையாக தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட நான்கு ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயமடைந்ததாகவும், இதனை அறிந்த கிராம மக்கள் திமுகவினரை மடக்கிப் பிடித்து அவர்களை வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

சூரக்கோட்டை பகுதியில் திமுகவினர் அட்டூழியம் : ஓபிஎஸ் கண்டனம்!!

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து 6 திமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு மூலகாரணமான திமுக பிரமுகர்கள் 2 பேர் தப்பி விட்டதாகவும், கிராம மக்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதால் 6 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய இருவர் கைது செய்யப்படவில்லை.

சூரக்கோட்டை பகுதியில் திமுகவினர் அட்டூழியம் : ஓபிஎஸ் கண்டனம்!!

ஆளும் கட்சியில் உள்ளதன் காரணமாக வழக்கை நீர்த்துப் போகச் செய்து மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற அச்சமும் பதற்றமும் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு சூரக்கோட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.