முதல்வர் பதவிக்கு செக் வைக்கும் திமுக.. கலக்கத்தில் காங்கிரஸ்!

 

முதல்வர் பதவிக்கு செக் வைக்கும் திமுக.. கலக்கத்தில் காங்கிரஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள தினத்தன்றே புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலும் நடக்கவிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னே ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தச் செய்தது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக கூட்டணி முதல்வர் பதவிக்கு உரிமை கோராதது அங்கு திடீர் திருப்பமாக அமைந்தது.

முதல்வர் பதவிக்கு செக் வைக்கும் திமுக.. கலக்கத்தில் காங்கிரஸ்!

இதையடுத்து, தற்போது அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக, காங்கிரஸ், மதசார்பற்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. தொகுதி பங்கீடு தொடர்பாக அக்கட்சிகளிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் திமுக நிர்வாகிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்ற நிலையில், திமுக அதிக தொகுதிகளை கேட்டதாகவும் முதல்வர் பதவியை கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

முதல்வர் பதவிக்கு செக் வைக்கும் திமுக.. கலக்கத்தில் காங்கிரஸ்!

புதுச்சேரியில் திமுக இதுவரை 4 முறை ஆட்சி அமைத்திருக்கிறது. காங்கிரஸ் 8 முறை ஆட்சி அமைத்திருக்கிறது. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததால், திமுக முதல்வர் பதவிக்கு செக் வைப்பதாக கூறப்படும் நிலையில் திமுகவின் இந்த நகர்வு காங்கிரஸை கலக்கமடையச் செய்துள்ளது. இதனிடையே, திமுக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.