• February
    21
    Friday

Main Area

Main



சிறுபான்மையினர் உரிமைக்காக திமுக எப்போதும் குரல் கொடுக்கும் : மு.க ஸ்டாலின்

MK Stalin
MK Stalin

சர்வதேச சிறுபான்மையினர் தினத்தன்று ( டிசம்பர் 18), திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், " சமூகநீதி-சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் உயரிய நோக்கங்களில் ஒன்று, மத- இன-மொழி-பாலினம் என அனைத்து சிறுபான்மையினர் உரிமைகளையும் நலன்களையும் காப்பது. சர்வதேச சிறுபான்மையினர் தினமான இன்று, குடியுரிமை மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காத்திட உறுதியேற்போம் " என்று பதிவிட்டிருந்தார். 

ttn

இது குறித்து இன்று கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய மு.க ஸ்டாலின், ' திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் என்று கூறினார். மேலும், 5 முறை கருணாநிதி ஆட்சியில் இருந்த போது சிறுபான்மையினருக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தினார்' என்றும் தெரிவித்தார். 
 

2018 TopTamilNews. All rights reserved.