இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய ‘அந்த 6 தொகுதிகள்’!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய ‘அந்த 6 தொகுதிகள்’!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டது. ஒரு சில கட்சிகளின் தொகுதி பட்டியல் மட்டுமே வெளிவந்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டியில் போட்டியிடுகிறது. வைகோவின் மதிமுக வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, பல்லடம், சாத்தூர், அரியலூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய ‘அந்த 6 தொகுதிகள்’!

இந்த நிலையில், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி தனி மற்றும் தளி ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய ‘அந்த 6 தொகுதிகள்’!

அண்ணா அறிவலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டதன் படி திமுக தலைமை 6 தொகுதிகளை கொடுத்திருக்கிறது. பாஜக மற்றும் அதிமுகவால் உருவாக்கப்பட்ட பிற அணிகள் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகின்றன என்று கூறினார். மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக உருவாவது குறித்த கேள்விக்கு, பிற அணிகளுக்கு வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கம் இல்லையென பதிலளித்தார்.