திமுகவில் வேல்முருகனுக்கு எத்தனை தொகுதிகள்? என்ன சின்னம்?

 

திமுகவில் வேல்முருகனுக்கு எத்தனை தொகுதிகள்? என்ன சின்னம்?

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருப்பார்கள். அவர்களுக்கு ஓரிரு தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும்.

திமுகவில் வேல்முருகனுக்கு எத்தனை தொகுதிகள்? என்ன சின்னம்?

இச்சூழலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுகவுக்கு எங்களின் பேராதரவை வழங்குகிறோம். திமுக எத்தனை தொகுதிகளைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருக்கிறோம். இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்று கூறியிருந்தார்.

திமுகவில் வேல்முருகனுக்கு எத்தனை தொகுதிகள்? என்ன சின்னம்?

தற்போது இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதையடுத்து கொங்கு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.