விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்?

 

விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்?

விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்?

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது. இதுகுறித்து பேசிய திருமாவளவன், “சனாதன ஆபத்துகளில் இருந்து தமிழகத்தையும், மக்களையும் பாதுகாக்கும் யுத்தம் இந்த தேர்தல்.பல்வேறு மாநிலங்களில் சூழ்ச்சிகளை செய்து ஆட்சிக்கு வந்த பாஜகவால், தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம்; வாக்குகள் சிதறினால் பாஜகவின் திட்டம் வென்றுவிடும்; கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது ” என்றார்.

விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்?

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேளச்சேரி ,கள்ளக்குறிச்சி , காட்டுமன்னார்கோயில் ,உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விருப்பம் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் திட்டக்குடி, சோழிங்கநல்லூர் ,புவனகிரி ,குன்னம், மயிலம் ஆகிய தொகுதிகளின் பட்டியலையும் திமுகவிடம் விசிக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.