கமல் ஹாசனை பின்னுக்கு தள்ளியது திமுக கூட்டணி!

 

கமல் ஹாசனை பின்னுக்கு தள்ளியது திமுக கூட்டணி!

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல் ஹாசன், டிடிவி தினகரன், சீமான் என ஐந்துமுனை போட்டி நிலவியது. இதை தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முடிவுகள் வெளியாகின.

கமல் ஹாசனை பின்னுக்கு தள்ளியது திமுக கூட்டணி!

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி 243 தொகுதிகளில் திமுக கூட்டணி 130 இடங்களிலும், அதிமுக கூட்டணி 130 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ம.நீ.ம வேட்பாளர் கமல்ஹாசன் 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் 3வது இடத்திலும் பின் தங்கியுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார்4 ஆயிரத்து 409 வாக்குகளும், கமல் ஹாசன் 4 ஆயிரத்து 293 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 2900 வாக்குகள் பெற்றுள்ளார்.