‘கடம்பூர் ராஜூ, டிடிவி தினகரனுக்கு எதிராக’..திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

 

‘கடம்பூர் ராஜூ, டிடிவி தினகரனுக்கு எதிராக’..திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றி வாகையை சூட துடித்துக் கொண்டிருக்கும் திமுக, பல்வேறு வியூகங்களை வகுத்த பிறகே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

‘கடம்பூர் ராஜூ, டிடிவி தினகரனுக்கு எதிராக’..திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் வழங்கப்பட்டன. அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த ஆலோசனை நேற்று முன்தினம் நடைபெற்றது. பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் 6 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி – நாகை மாலி, திருப்பரங்குன்றம் தொகுதி – எஸ்.கே.பொன்னுதாய், கோவில்பட்டி தொகுதி – கே. சீனிவாசன், கந்தர்வகோட்டை தொகுதி – சின்னதுரை, அரூர் தொகுதி – குமார், திண்டுக்கல் – எஸ்.பாண்டி ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என அறிவித்தார்.

‘கடம்பூர் ராஜூ, டிடிவி தினகரனுக்கு எதிராக’..திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

இதில் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது கோவில்பட்டி தொகுதி. அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இருவரையும் எதிர்த்து திமுக சார்பில் கே.சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். அதே போல, திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து பாண்டி களமிறங்குகிறார்.