“திமுக கூட்டணி 142; அதிமுக கூட்டணி 91 ” அதிர வைக்கும் தேர்தல் முடிவுகள்!

“திமுக கூட்டணி 142; அதிமுக கூட்டணி 91 ” அதிர வைக்கும் தேர்தல் முடிவுகள்!

தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார்? முதல்வர் அரியணையை அலங்கரிக்க போவது யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும் சில மணிநேரங்களில் பதில் கிடைத்து விடும். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று அதற்கான முடிவு தெரியவரவுள்ளது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி இந்த தேர்தலில் நிலவியது.

“திமுக கூட்டணி 142; அதிமுக கூட்டணி 91 ” அதிர வைக்கும் தேர்தல் முடிவுகள்!

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கிய நிலையில் தொடர்ந்து அதற்கான முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியை பொருத்தவரையில் 173 தொகுதிகளில் திமுக தனித்துப் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும் அதிமுக 6 தொகுதிகளிலும், சிபிஎம் 6 தொகுதிகளிலும், சிபிஐ 6 தொகுதிகளிலும் ,விசிக 6 தொகுதிகளிலும் ,மற்றவை 12 தொகுதிகள் என மொத்தம் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி களம் கண்டது.

“திமுக கூட்டணி 142; அதிமுக கூட்டணி 91 ” அதிர வைக்கும் தேர்தல் முடிவுகள்!

இதில் தற்போது உள்ள நிலவரப்படி திமுக 117 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் ,மதிமுக 3 தொகுதிகளிலும் , சிபிஎம்2 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது. அதேபோல் சிபிஐ 2தொகுதிகளிலும், விசிக 3 தொகுதிகளிலும், மற்றவை இரண்டு தொகுதிகள் என மொத்தம் திமுக கூட்டணி 142 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

“திமுக கூட்டணி 142; அதிமுக கூட்டணி 91 ” அதிர வைக்கும் தேர்தல் முடிவுகள்!

அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் அதிமுக தனித்து 179 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பாமக 23 தொகுதிகளில், பாஜக 20 தொகுதிகளில், தாமாக 6 தொகுதிகளில், மற்றவை ஆறு தொகுதிகள் என 234 தொகுதிகளில் களம் கண்டது ,அதிமுக போட்டியிட்ட 179 தொகுதிகளில் தற்போது 78 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், மற்றவை ஒரு தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதிமுக தற்போது வரை 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.