நாளை மறுநாள் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்!

 

நாளை மறுநாள் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்!

விவசாய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க வரும் 21 ஆம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதி, விலை பொருள் விலை உத்தரவாதம், விவசாய தேவை ஆகிய வேளாண்துறை சம்பந்தப்பட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது, இந்த மசோதாக்கள் சட்டமாக மாறினால், விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலை என்பதே இல்லாமல் போய்விடும் என்றும் சந்தைக் கட்டணம், வரிகள் உள்ளிட்டவை நேரடியாக மத்திய அரசுக்கு செல்லும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

நாளை மறுநாள் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்!

ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை தவறாக புரிந்து கொண்டதாகவும் விவசாயிகளின் நலனுக்காக இந்த சட்டம் இயற்றப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு தமிழகத்திலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

நாளை மறுநாள் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்!

இந்த நிலையில், விவசாய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க வரும் 21 ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.