234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

 

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக – மார்க்சிஸ்ட் இடையே நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

இதனிடையே விசிக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீக் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவற்றிற்கு திமுக எத்தனை தொகுதிகளை வழங்கியிருக்கிறது என்பது உறுதியாகி விட்டது. திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 234 இடங்களில், 17 இடங்கள் கூட்டணிக்கு இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் – முத்தரசன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6 ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை.