‘சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும்’..திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

‘சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும்’..திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகவும் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். அதனால் ஜூலை 27 ஆம் தேதி(இன்று) காலை 10.30 மணிக்கு காணொளி வாயிலாக திமுக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் கொரோனா மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது. அந்த கூட்டத்தில் அனைத்து திமுக தோழமைக் கட்சிகளும் கலந்து கொண்டன.

‘சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும்’..திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இந்த நிலையில் அந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தணிக்கை காலத்திற்கு தமிழகத்தை பின்னோக்கி இழுக்க நினைப்பது பலிக்காது என்றும் கருத்து சுதந்திரத்தை காத்திட எதிர்கட்சிகளை உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு அமைக்கவும், கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை மறைத்த அரசுக்கு கண்டனம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் கொரோனவால் பாதித்த, உயிர்த்தியாகம் செய்த முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.