10 மணிக்கு மேல வாக்காளர் வீட்டுல அமைச்சருக்கு என்ன வேலை?

 

10 மணிக்கு மேல வாக்காளர் வீட்டுல அமைச்சருக்கு என்ன வேலை?

கரூரில் திமுக- அதிமுக இடையிலான மோதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தமிழகத்தில் அடுத்தமாதம் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது, இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தலில் மோதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக சார்பில் செந்தில்பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும்
போட்டிப்போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

10 மணிக்கு மேல வாக்காளர் வீட்டுல அமைச்சருக்கு என்ன வேலை?

இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதால் அப்பகுதி திமுகவினருக்கும், அதிமுகவினரிடையே வாக்குவாதம்ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினும் மோதலில் ஈடுபட்டதால், அதிமுகவினர் 16 பேரும், திமுகவினர் 3 பேரும் காயமடைந்தனர்.

மோதல் விவகாரத்தில் திமுகவினரை கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோதலில் காயமடைந்தவர்களை திமுக எம்.பி.கனிமொழி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.