“தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை” : ஆ. ராசா

“தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை” :  ஆ. ராசா

ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி, அதனால்தான் அவரது நினைவிட திறப்பு விழாவுக்கு மோடி வரவில்லை என்று ஆ. ராசா விமர்சித்துள்ளார்.

“தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை” :  ஆ. ராசா

சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர் , அண்ணா ,எம்ஜிஆர் ஆட்சியை அளிப்போம் என்று கூறாமல் ஜெயலலிதா ஆட்சியை அளிப்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார்.

“தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை” :  ஆ. ராசா

ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி. மறுபுறம் தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை. ஜெயலலிதா தமிழகத்தின் , தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தது இல்லை . அவர் ஆளுமை மிக்கவர் .எனவே இந்த இரண்டு அடையாளங்களில் எந்த ஆட்சியை அதிமுக அரசு அளிக்க போகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

“தமிழகத்தில் லேடி ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா பலிக்கவில்லை” :  ஆ. ராசா

தொடர்ந்து பேசிய அவர், ” தற்போது உள்ள முதல்வரும் , அமைச்சர்களும் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற முடியாமல் மத்திய அரசின் கைப்பாவையாக மாறி உள்ளனர். ஸ்டாலின் முதல்வராக அமர்ந்தால் கல்வி, வேலைவாய்ப்பு என தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் இடம் வகுக்கும். ஒரு எடப்பாடி அல்ல 7 எடப்பாடி வந்து தமிழகத்திற்கு மோடியை அழைத்து வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது. ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி. அதனால்தான் அவரது நினைவிட திறப்பு விழாவுக்கு மோடி வரவில்லை. வார்டு கவுன்சிலராக கூட இருக்க தகுதி இல்லாத ஒருவர் முதல்வராக உள்ளார் ” என்றார் .