தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக ? விஜயகாந்த் ஆலோசனை!

 

தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக ? விஜயகாந்த் ஆலோசனை!

சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக ? விஜயகாந்த் ஆலோசனை!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேசமயம் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் தேமுதிகவும், பாமகவும் இழுபறியில் உள்ளது. தேமுதிக 40 சீட்டுகளுக்கு மேல் கேட்டு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பாமக 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையை முடக்கியுள்ளது. இந்த சூழலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அதன் தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார். அதேபோல சசிகலா விவகாரத்தை கையில் எடுத்துள்ள அவர் சசிகலா மீண்டும் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பழசை மறந்து அவரை தூக்கி எறிந்து விட்டனர் என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக ? விஜயகாந்த் ஆலோசனை!

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதி தேமுதிக பொறுப்பாளர்களுடன் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் 39 மாவட்ட பொறுப்பாளர்கள், 6 மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் விஜயகாந்த் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.