வன்னியர்களை பற்றி நினைக்கும் அதிமுகவிற்கு மற்ற சாதியினரை பற்றி கவலையில்லை: தேமுதிக

 

வன்னியர்களை பற்றி நினைக்கும் அதிமுகவிற்கு மற்ற சாதியினரை பற்றி கவலையில்லை: தேமுதிக

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக, தனித்து போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியர்களை பற்றி நினைக்கும் அதிமுகவிற்கு மற்ற சாதியினரை பற்றி கவலையில்லை: தேமுதிக

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், “எங்களிடம் கூட்டணிக்காக வாருங்கள் என்று பல கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன என்றும் எல்.கே.சுதீஷ் கூறினார்.10.5% இடஒதுக்கீடு கொடுத்தால் வன்னியர்கள் வாக்களிப்பார்கள் என்று அதிமுக நினைக்கிறது, ஆனால் மற்ற சாதியினர் நிலை என்ன என்று நினைத்து பார்க்கவில்லை” எனக் கூறினார்.