“நீ ஆட்சிய பிடிச்சுட்டா ’அத’ செய்ய நாங்க ரெடி… நீ ரெடியா” – எடப்பாடிக்கு தேமுதிக நேரடி சவால்!

 

“நீ ஆட்சிய பிடிச்சுட்டா ’அத’ செய்ய நாங்க ரெடி… நீ ரெடியா” – எடப்பாடிக்கு தேமுதிக நேரடி சவால்!

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிறேன் என்ற அறிவிப்பை தூக்கி சாப்பிடும் அறிவிப்பாக அமைந்திருக்கிறது தேதிமுகவின் முடிவு. அதிமுக கூட்டணியே வேண்டாம் என தூக்கியெறிந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா, விலகுவதா என்ற கேள்விகளுடன் இன்று மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

“நீ ஆட்சிய பிடிச்சுட்டா ’அத’ செய்ய நாங்க ரெடி… நீ ரெடியா” – எடப்பாடிக்கு தேமுதிக நேரடி சவால்!

கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணிக்கு உறுதி சொல்லப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்க்காத திருப்பமாக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமடைந்துள்ளனர். மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர். இவ்வளவு நாளும் கூட்டணிக்காகக் கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்து தொண்டர்கள் இன்னலுக்குள்ளாகி உள்ளுக்குள்ளேயே போட்டு புளுங்கி கொண்டிருந்தனர். இந்த ஒற்றை அறிவிப்பு மொத்த இன்னலையும் தூக்கியெறிந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இச்சூழலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஒரு தேமுதிக நிர்வாகி ஒருவர் ஆவேசமாகப் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தத் தேர்தலில் அதிமுகவை தேமுதிக முடித்துவைக்கும். தேமுதிகவை முதுகில் குத்தி எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள். சசிகலாவுக்குச் செய்ததுபோல் எங்களுக்கும் செய்திருக்கிறார்கள். நான் அவர்கள் இருவருக்கும் சவால் விடுகிறேன். முடிந்தால் 2021 தேர்தலில் அதிமுக மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால் தேமுதிக கட்சியைக் கலைத்துவிடுகிறோம். உங்களால் முடியுமா? விஜயகாந்துக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் யாரும் நன்றாக இருந்த சரித்திரம் இல்லை” என்றார்.