சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற தேமுதிக!

 

சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற தேமுதிக!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவியது. பிரதான கட்சிகளான அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும், திமுக முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினும் நிறுத்தப்பட்டனர். இவர்களை தவிர மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் கமல்ஹாசனும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானும் களமிறங்கினர். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கேட்ட சீட்டுகள் தராததால் அக்கட்சி கூட்டணியிலிருந்து அதிருப்தியுடன் விலகியது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற தேமுதிக!

இந்நிலையில் தேர்தல் ஆணைய தகவல்களின்படி திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சிகளான, காங்கிரஸ் 4.27%, பாமக 3.80%, பாஜக 2.62%, தேமுதிக 0.43%, சிபிஐ 1.09%, சிபிஎம் 0.85%, ஐ.யு.எம்.எல் 0.48% வாக்கு விழுக்காட்டை பெற்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 0.75% வாக்குகள் கிடைத்துள்ளன. ஆகவே நோட்டாவை விட குறைவான வாக்குகளையே தேமுதிக பெற்றுள்ளது.