சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 தாண்டி விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் , டீசல் விலையை மத்திய , மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த சூழலில் பெட்ரோல், டீசல் ,சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது . சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் சென்று எதிர்ப்பு தெரிவித்தார். சென்னை பாரிமுனையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சைக்கிளில் அணிவகுப்பாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

போராட்டத்தின் கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் போராட்ட பகுதிக்கு செல்வதற்கு சுமார் 500 கிலோ மீட்டர் இடைவெளியில் சைக்கிள் மூலம் அவர்கள் பயணம் மேற்கொண்டனர். கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறி சைக்கிள் பயணம் செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்த நிலையில் தேமுதிகவினர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.