“அவங்க 1000 ரூவா கொடுக்கட்டும்; நம்ம 300 ரூவா கொடுப்போம்” : உளறிய நிர்வாகியால் ஓட்டம் பிடித்த பிரேமலதா

 

“அவங்க 1000 ரூவா கொடுக்கட்டும்;  நம்ம 300 ரூவா கொடுப்போம்” : உளறிய நிர்வாகியால் ஓட்டம் பிடித்த  பிரேமலதா

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியின் கீழ் தேர்தல் நடக்கவிருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி , மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக,பாமக,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. ஒவைசி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதே போல் இந்த முறை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமத்துவ மக்கள் கட்சி ,இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

“அவங்க 1000 ரூவா கொடுக்கட்டும்;  நம்ம 300 ரூவா கொடுப்போம்” : உளறிய நிர்வாகியால் ஓட்டம் பிடித்த  பிரேமலதா

இதனிடையே அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறியது . இதையடுத்து தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது.தேமுதிக முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற இரு கட்சிகள் இருந்த நிலையில் தேமுதிக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்வு செய்தது.இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவர் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரின் மனைவியும் கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் களம் காண்கிறார்.

“அவங்க 1000 ரூவா கொடுக்கட்டும்;  நம்ம 300 ரூவா கொடுப்போம்” : உளறிய நிர்வாகியால் ஓட்டம் பிடித்த  பிரேமலதா

இந்நிலையில், தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் , விருத்தாசலம் தொகுதியை தேமுதிககோட்டையாக மாற்ற வேண்டும்; அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்? என்ன செய்யலாம் என்று ஐடியா கேட்க, பட்டென்று எழுந்த நிர்வாகி, விருதாச்சலம் தொகுதியில் 2,51,703 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுகவினர், திமுகவினர் கொடுக்கும் ரூ. 1000, 2000 அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் போகும். அப்படி பார்த்தால் 40% பேர் தான் இருப்பார்கள். மீத, முள்ள 60%பேருக்கு நாம் ரூ.300 கொடுத்தால் சுமார் 7 1/2 கோடி தான் செலவாகும். ஆனால் நமக்கு எப்படியும் 70முதல் 80 ஆயிரம் வாக்குகள் நமக்கு கிடைத்து விடும் என்றார். இதை கேட்ட பிரேமலதா நிர்வாகியை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.

“அவங்க 1000 ரூவா கொடுக்கட்டும்;  நம்ம 300 ரூவா கொடுப்போம்” : உளறிய நிர்வாகியால் ஓட்டம் பிடித்த  பிரேமலதா

ஏற்கனவே பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தில் சிக்கியுள்ள தேமுதிகவை நினைத்து கவலையொருபுறம், மற்றொரு புறம் பணம் பட்டுவாடா செய்யலாம் என ஓபனாக கூறும் நிர்வாகி மறுபுறம் என்ற கடுப்பில் தான் பிரேமலதா விஜயகாந்த் சென்று விட்டதாக விருதாச்சலம் தேமுதிகவினர் முணுமுணுத்து வருகின்றனர்.