“கொரோனா சோதனை என்ற பெயரில்….” விருத்தாசலத்தில் பிரேமலதா கதறல்!!

 

“கொரோனா சோதனை என்ற பெயரில்….” விருத்தாசலத்தில் பிரேமலதா கதறல்!!

கொரோனா சோதனை என்ற பெயரில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

“கொரோனா சோதனை என்ற பெயரில்….” விருத்தாசலத்தில் பிரேமலதா கதறல்!!

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 18ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அவரது தம்பி எல்.கே.சுதீஷ் உடனிருந்தார். இதை தொடர்ந்து உடல்நலக்குறைவால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் எல் .கே. சதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் சுதீஷின் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது. அதனடிப்படையில் விருத்தாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் பிரேமலதாவை கொரோனா பரிசோதனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பரப்புரையை பாதியில் நிறுத்தவே இதுபோன்ற சதி நடப்பதாக தேமுதிகவினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து பிரேமலதா கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து பிரேமலதாவிற்கு கொரோனா இல்லை என்ற முடிவு வந்தது.

“கொரோனா சோதனை என்ற பெயரில்….” விருத்தாசலத்தில் பிரேமலதா கதறல்!!

இந்நிலையில் விருத்தாச்சலத்தில் தேமுதிக வேட்பாளரும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் , “கொரோனா சோதனை என்ற பெயரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் என்னை அலைக்கழித்தனர். கொரனோ பரிசோதனை செய்தபின் 5 மணி நேரத்தில் முடிவு தருவதாக கூறி மறுநாள் தான் முடிவை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.