41 இடங்களை கொடுங்கள்! இல்லையெனில் கொடுக்கும் இடத்தில் கூட்டணி- தேமுதிக

 

41 இடங்களை கொடுங்கள்! இல்லையெனில் கொடுக்கும் இடத்தில் கூட்டணி- தேமுதிக

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் கேட்க உள்ளோம் என தேமுதிக கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டன. தேர்தலுக்கான கூட்டணி பற்றி கட்சிகளுக்குள்ளாக பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது குறித்த கூட்டணிகள் தொடருமா? அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணியில் மாற்றம் இருக்குமா? என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கை கோர்ப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தேமுதிக சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி கலந்துகொண்டாா்.

41 இடங்களை கொடுங்கள்! இல்லையெனில் கொடுக்கும் இடத்தில் கூட்டணி- தேமுதிக

அதன் பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தசாரதி, “தமிழகத்தில் 3வது அணி அமைய வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 இடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் 41 இடங்கள் கேட்க உள்ளோம். நாங்கள் கேட்கும் இடத்தை கொடுப்பவர்களிடம் கூட்டணி அமையும். தனித்து போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்.

தேர்தலில் அதிக இடங்கள் கொடுக்கப்படும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும். பொதுக்குழுவிற்கு பிறகு பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து அறிவிக்கப்படும். கூட்டணியில் இருப்பதால் தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கைகளை கடிதம் மூலம் அனுப்பியுள்ளனர்” என தெரிவித்தார்.