வீட்டு வாடகை கேட்டு தாக்குதல்… தேமுதிக பிரமுகர் கைது!

 

வீட்டு வாடகை கேட்டு தாக்குதல்… தேமுதிக பிரமுகர் கைது!

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டு வாடகை தராததால் வடமாநில இளைஞர்களை தாக்கிய தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் ராஜ். இவர் தேமுதிகவை சேர்ந்தவர். இவரது வீட்டில் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் குமார் சாகுவின் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தங்கி இருந்துள்ளனர். கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், கடந்த ஆண்டை போலவே ஊரடங்கு பல மாதங்கள் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வீட்டு வாடகை கேட்டு தாக்குதல்… தேமுதிக பிரமுகர் கைது!

ஊரடங்கால் வேலையின்றி தவித்த இந்த வடமாநில இளைஞர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். அதன் படி ஒரு சிலர் வீட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர். வேலை இல்லாததால் அவர்கள் தர வேண்டிய 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாடகை கேட்டு அவர்களது வீட்டுக்கு சென்ற சுரேஷ்ராஜ், வாடகை கொடுக்காமல் சொந்த ஊருக்கு செல்ல கூடாது எனக் கூறி அவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, சுரேஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.