அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக?!

 

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக?!

இந்நிலையில் 15 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக?!

ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் கேட்ட 10.5%இடஒதுக்கீடும் அழிக்கப்பட்டுவிட்டது. அதே குஷியில் இருந்த பாமக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் அளவுக்கு சுறுசுறுப்பாக பணிசெய்து வருகின்றனர்.அதே சமயம் பாஜகவுடன் தொகுதி ஒதுக்கீடு நாளை இறுதியாகும் என்று கூறப்படும் நிலையில், தேமுதிகவை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று கவலைப்படுகிறார்கள் அக்கட்சியினர். விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாமல் போக தேமுதிகவின் மவுசு குறைந்துள்ளது. இதனால் அக்கட்சிக்கு பாமக அளவுக்கு முக்கியத்துவம் அளிக்க அதிமுக முன்வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கு சென்று தேமுதிக அசிங்கப்பட்டது தான் மிச்சம்.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக?!

இந்நிலையில் 15 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள 15 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. அதிமுக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படும் 15 தொகுதிகள், ஒரு எம்பி சீட்டை ஏற்க தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளது. 18 தொகுதிகள் ஒதுக்கினால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என தேமுதிக திட்டவட்டமாக கூறியுள்ளது. கேட்ட தொகுதயை ஒதுக்காத பட்சத்தில் கூட்டணி பற்றி அதிமுகவே முடிவு செய்துகொள்ளலாம் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சவில்லை என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியிருந்த நிலையில் அதிமுகவின் அழைப்பை தேமுதிக ஏற்கவில்லை.