நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

 

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்ததோடு பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால், உதகை நகரில் 2 நாட்களாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் வீடுகள் இல்லாதவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டிதர வேண்டும். மேலும் கனமழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.