உள்ளாட்சி தேர்தலுக்காக 4 தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் – விஜயகாந்த் அறிவிப்பு!

 

உள்ளாட்சி தேர்தலுக்காக 4 தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் – விஜயகாந்த் அறிவிப்பு!

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

உள்ளாட்சி தேர்தலுக்காக 4 தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் – விஜயகாந்த் அறிவிப்பு!

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. 22ஆம் தேதியோடு நிறைவடைகிறது. தேர்தல் நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் பிஸியாக இருக்க, அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரம், கூட்டணி என பிஸியாக இருக்கின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக சட்டப்பேரவை தேர்தலிலேயே முறிந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேமுதிகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனு வழங்கி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலுக்காக 4 தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் – விஜயகாந்த் அறிவிப்பு!

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் மற்றொரு துணை செயலாளர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அவைத் தலைவர் வி.இளங்கோவன், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.