விஜயகாந்த் உடல்நிலை : தேமுதிக திடீர் அறிக்கை!

 

விஜயகாந்த் உடல்நிலை : தேமுதிக திடீர் அறிக்கை!

விஜயகாந்த உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக விளக்கமளித்துள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை : தேமுதிக திடீர் அறிக்கை!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியானது.இதனால் தேமுதிக தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர்

விஜயகாந்த் உடல்நிலை : தேமுதிக திடீர் அறிக்கை!

இந்நிலையில் தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.