140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ரெடி.. பட்டியலை தயாரித்த தேமுதிக?!

 

140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ரெடி.. பட்டியலை தயாரித்த தேமுதிக?!

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் கூட்டணியை முறித்துக் கொண்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். தேர்தல் நெருக்கத்தில் திடீரென கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு கட்சிகளோடு கூட்டணி அமைக்குமா? என்பது தற்போது பேசு பொருளாக இருக்கிறது.

140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ரெடி.. பட்டியலை தயாரித்த தேமுதிக?!

தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்தது. அதை தேமுதிக மதிக்காததால், இனிமேல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனிடையே, தேமுதிக தொண்டர்கள் அமமும பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. மக்கள் நீதி மய்யத்தின் அழைப்பை ஏற்காத தேமுதிக, அமமுக கூட்டணிக்கு செல்ல முயற்சிப்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ரெடி.. பட்டியலை தயாரித்த தேமுதிக?!

இந்த நிலையில், 140 தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியலை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் களமிறங்க தயாரா? கூட்டணி ஏற்படும் பட்சத்தில் தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வருவீர்களா? என உத்தேச வேட்பாளர்களிடம் பிரேமலதா கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக தனித்து போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைக்கிறதா? என்பதே இன்னும் உறுதியாகாத சூழலில் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.