மக்களுக்கு பணக் கஷ்டம்.. அதனால சொத்து வரியை தள்ளுபடி செய்யுங்க.. கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

மக்களுக்கு பணக் கஷ்டம்.. அதனால சொத்து வரியை தள்ளுபடி செய்யுங்க.. கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

மக்கள் பணக் கஷ்டத்தில் இருப்பதால் மாநிலத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் டிவிட்டரில்: கொரோனா தொற்றால் பெரும் நிதி சேதத்தை குடிமக்கள் தாங்கி வருகின்றனர்.

மக்களுக்கு பணக் கஷ்டம்.. அதனால சொத்து வரியை தள்ளுபடி செய்யுங்க.. கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

குடிமக்களின் நிதிசுமையை குறைப்பது அரசாங்கத்தின் மீதான கட்டாயமாகும். மனிதாபிமான அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற பஞ்சாயத்துகளில் ஒரு வருட காலத்துக்கு அனைத்து சொத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவிடம் வலியுறுத்துகிறேன். கர்நாடகாவின் இமேஜ் மிகவும் மோசமான நிலைக்கு வந்து விட்டது.

மக்களுக்கு பணக் கஷ்டம்.. அதனால சொத்து வரியை தள்ளுபடி செய்யுங்க.. கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

பிரச்சினையை தீர்ப்பதில் கர்நாடகா அரசு தவறி விட்டது என்பதை நாம் அறிவோம். அவர்கள் (மாநில அரசு) சுகாதாரத் துறைக்கு உணவுக்காக செலவிட்ட தொகை, கொரோனா நெருக்கடி காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு செலவு செய்த தொகை குறித்த விவரங்களை சொல்லட்டும். அவை மிகவும் வெளிப்படையானவை என்றால் ஒரு கணக்கை (செலவு செய்த தொகை) நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அதில் பதிவு செய்துள்ளார்.