மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எடியூரப்பா அரசு… காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எடியூரப்பா அரசு… காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை எடியூரப்பா அரசு தேர்ந்தெடுத்துள்ளது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அம்மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியது. கொரோனா வைரஸ் தொடர்பான விஷயங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சி முதல்வர் எடியூரப்பா அரசுக்கு கடும் குடைச்சல் கொடுத்து வருகிறது.

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எடியூரப்பா அரசு… காங்கிரஸ் குற்றச்சாட்டு
பி.எஸ். எடியூரப்பா

நேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.கே. சிவகுமார் சட்டப்பேரவையில் பேசுகையில், பி.எஸ். எடியூரப்பா அரசு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. அது ஏழைகளின் சடலத்திலும் பணம் சம்பாதிக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எடியூரப்பா அரசு… காங்கிரஸ் குற்றச்சாட்டு
சித்தராமையா

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுகையில், பி.பி.இ. கருவிகள், கையுறைகள் மற்றும் சானிடைசர் வாங்கியதில் மாநில அரசு ஊழல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்வேறு விலைகளில் பணம் வழங்கப்பட்ட தரவுகளை வழங்கினார்.