கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக அரசு மக்களை சூறையாடியது…. சிவகுமார் குற்றச்சாட்டு

 

கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக அரசு மக்களை சூறையாடியது…. சிவகுமார் குற்றச்சாட்டு

கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக பா.ஜ.க. அரசு மக்களை சூறையாடியது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் அமைச்சர்கள் மேலாண்மை என்ற பெயரில் பணத்தை கொள்ளையடித்தனர். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) முதல் மருத்துவ கருவிகள் கொள்முதல் வரை, படுக்கை முதல் பணியாளர்களின் உணவு கட்டணம் வரை, ஆம்புலன்ஸ் முதல் உணவு கருவிகள் வரை என எல்லாவற்றிலும் அரசு கொள்ளையடித்தது. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்.

கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக அரசு மக்களை சூறையாடியது…. சிவகுமார் குற்றச்சாட்டு
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்

அனைத்து தேர்தல்களும் அனைத்து கட்சியினருக்கும் பெருமதிப்பு உடையது. எந்த தொகுதியில் தேர்தல் நடந்தாலும் அது எங்களுக்கு மதிப்புமிக்கது. அது பெரிய தேர்தல் அல்லது இடைத்தேர்தலாக இருந்தாலும் அனைத்து கட்சிகளுக்கும் மதிப்பு இருக்கும். இந்த தேர்தல்களை கடந்த காலத்தை போலவே நடத்துகிறோம். நான் கட்சி தலைவராக இருந்தாலும், நான் இன்னும் கட்சியின் தொண்டன்தான். ஆர்.ஆர். நகர் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடையாது. நாங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான முயற்சிகளை மேற்கொள்வோம்.

கோவிட்-19 நிர்வாகம் பெயரில் கர்நாடக அரசு மக்களை சூறையாடியது…. சிவகுமார் குற்றச்சாட்டு
மதசார்பற்ற ஜனதா தளம்

ஆர்.ஆர். நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்துள்ள விண்ணப்பங்கள் குறித்து கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள். மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஒரு கட்சி அவர்கள் தங்களது சொந்த அரசியலை செய்வார்கள். நாங்கள் எங்களது அரசியலை செய்வோம். அவர்கள் தங்கள் தேர்தலை செய்வார்கள் நாங்கள் எங்களது சொந்த இதை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.