பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

 

பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு வன்முறை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியதாவது: டி.ஜே. ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி வன்முறை குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து காங்கிரஸ் தனது பங்கை செய்ய தொடங்கியுள்ளது. பா.ஜ.க. இந்த சம்பவத்தை அரசியல்மயமாக்குகிறது. அவர்கள் தங்களது உட்கட்சி பிரச்சினையை கழுவ முயற்சிக்கின்றனர். நவீன் என்ன பதிவிட்டாலும், ஒரு பா.ஜ.க. ஆதரவாளர் இந்த முழு காட்சியையும் உருவாக்கியுள்ளார் என அவரே கூறியுள்ளார். அவர்கள் அதை பாதுகாக்க விரும்புகிறார்கள், அதனால்தான் அவர்கள் பிரச்சினையை உருவாக்கினர். வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய சமூக ஜனநாயக கட்சியுடன் காங்கிரசுக்கு தொடர்பு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

கடந்த 11ம் தேதியன்று பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் தொடர்பாக அவதூறான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. நவீனுக்கு எதிராக டிஜே ஹள்ளி காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் கோபத்தில் அந்த காவல் நிலையம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர், அங்கியிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு
அதேவேளையில், எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல், அவரது வீட்டை சூறையாடினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கலவரகாரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 60 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட நவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டி.ஜே. ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நாளை காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.