‘40% முன்பதிவு குறைவு’ தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

 

‘40% முன்பதிவு குறைவு’ தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த 14,757 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் முடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொதுமுடக்கத்தால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் பலர் இன்னும் திரும்பவில்லை. இத்தகைய சூழலில் தான், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

‘40% முன்பதிவு குறைவு’ தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

தீபாவளிக்காக ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை போல இந்த ஆண்டும் 14,757 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

‘40% முன்பதிவு குறைவு’ தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து மட்டுமே 9,510 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டு 40% முன்பதிவு குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.